ரணிலின் வழக்கு விசாரணை : வழமைக்கு திரும்பிய மின் வெட்டு
புதிய இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிமன்ற அறையில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் தடைபட்டதால், வழக்கில் உத்தரவு வழங்குவது 30 நிமிடங்கள் தாமதமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்ற அறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சில நிமிடங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த நிலையில், மின்சார சபையின் ஊழியர் மின் வெட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மாலை 5.30 மணியளவில் தொடர்புடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, அதன் பின்னர் இது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
