லண்டனில் பார்த்த திரைப்படம் KGF - பா.நடேசன்

By Independent Writer Apr 16, 2022 08:31 PM GMT
Independent Writer

Independent Writer

in சினிமா
Report

''நான் நிறைய படங்களில் நடித்துள்ளேன், நிறைய படங்களில் பின்னணி குரல் (Dubbing) கொடுத்து உள்ளேன், ஆனால் KFG படத்தில் பின்னணி குரல் கொடுத்தற்காக மக்களிடையே கிடைத்த வரவேற்பை போன்று முதல் எப்போதும் கிடைக்கவில்லை, அதுவும் KGF Chapter Two ல் உங்கள் குரலை காணவில்லையே என எங்கு போனாலும் மக்கள் கேட்கிறர்கள்'' என அண்மையில் நிழல்கள் ரவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

உண்மைதான், இந்திய மாஸ் மசாலா திரைப்படமாக, கர்நாடக சினிமா துறையில், KFG, ஒரு மைல் கல். கர்நாடக சினிமா துறைக்கு ஓர் திருப்பு முனை.

பலவித பிரம்மாண்டங்களையும் , மாஸ் மசாலா சினிமாக்களையும் கண்டு வந்த இந்திய சினிமாகளில் KFG ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

2018 டிசம்பர் இல் வெளியான KGF Chapter One இன் தயாரிப்பு செலவு 80கோடி இந்திய ரூபாய்கள்(INR).

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் கழித்து 2022 சித்திரை திருநாள் வெளியீடு ஆக வந்திருக்கும் KGF Chapter Two இன் தயாரிப்பு செலவு INR100கோடி என கூறப்படுகிறது.

இது வரை இரண்டாம் பாகமாக வெளிவந்த இந்திய சினிமாக்களில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு, மூன்றாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ள படம் KGF தான்.

பிரமாண்ட இயக்குனர்களாக சொல்லப்படும் ஷங்கரின் 2.0 மற்றும் ராஜமௌலியின் RRR படங்களின் பட்ஜெட் INR 550 கோடியை தாண்டுகிறது.

KGF Chapter Two வோடு தமிழில் வெளிவந்த Beast இன் தயாரிப்பு செலவு INR150கோடி.

வசூல் செய்யப்பட்ட நிலவரத்தை பார்த்தால் KGF Chapter One INR250கோடி யாகவும் , KGF Chapter Two இன் உலகளாவிய வசூல் இரண்டாம் நாள் INR 300கோடி யை தாண்டி விட்டது என்கிறது இந்திய டுடே.

வியாபார ரீதியாக பெரும் இலாபத்தையும், பல மொழி பேசும் மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் KGF ஒரு Dubbing திரைபடம் தான்.

சஞ்சய் தத் மற்றும் ரவீனா டேண்டன் தவிர KFG இன் நடிகர்களும், தொழிநுட்ப வல்லுனர்களும் பெரிதும் மாற்று மொழி மக்கள் மத்தியில் அறியப் படாதவர்கள்.

படத்தின் பிரதான பாத்திரம் ஏற்று நடித்திருக்கும் யாஷ்(yash) கூட பிற மொழி பேசும் சாதாரண மக்கள் மத்தியில் அறியப்படாத ஒருவர் தான். KGF இற்கு பின்னர் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் அறியப்படுகிறார்.

பிரமாண்டம், மாஸ் மசலா என்ற பெயரில் இதுவரை கொட்டப்பட்ட குப்பைகளை ஏராளம். மாஸ் நடிகர் பட்டாளம், உலக பிரபலம் மிக்க தொழிநுட்ப வல்லுனர்கள், தேவையற்ற விரசங்கள், லண்டன் அல்லது லஸ்ஏஞ்சலில் post production, சம்பந்தமே இல்லாமல் பாட்டுகளும், பகிடிகளும் என தேவையற்ற ஆணிகள் எதுவுமே இல்லை.

தயாரிப்பு செலவில் 90சதவீதத்தை ஏப்பம் விட்டு விடும் சூப்பர் ஸ்டார் களும் இல்லை.

ஆனால் இவர்களின் பப்படங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு இருக்கிறது KGF.

பிரமாண்டங்கள் என இந்திய சினிமா இதுவரை மன்னர்களின் கால மாட மாளிகைகளையும், உலக அதிசயங்களையும், வெளிநாட்டு சுற்றுலா தளங்களையும் மிக வர்ணமயமாக காட்டி இருப்பார்கள். மிஞ்சி போனால் சண்டை காட்சிகளை உல்டா பண்ணி எடுத்திருப்பார்கள்.

KFG காட்டிய பிரமாண்டம் என்பது இருண்ட அடிமைகள் உலகத்தின் பிரமாண்டம். ஆனால் அது எப்போதும் பயத்தை மட்டுமே ஏற்படுத்த கூடிய கோணத்தில் இல்லை.

இது இந்த மண்ணின் கதை என்பதை வெயிலும் புழுதியும் கலந்த பிரமாண்டம் காட்டுகிறது.

ஆஸ்திரேலியன் post-apocalyptic திரைப்படமான Mad Max: Fury Road காட்சிகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை.

மாஸ் மசாலா திரைப்படம் ஒன்றுக்கு KGF தெரிவு செய்த Colour Tone அலாதியானது.

சினிமா இயக்குனர்களின் ஊடகம் என்பதை KGF Chapters மீண்டும் ஒருமுறை உடைத்து சொல்லி உள்ளது. KGF அரசியல் நேர்த்தி (Political Correctness) கொண்ட அல்லது லாஜிக் மீறல்கள் இல்லாத திரைக்கதையோ இல்லை. ஆனால் ஒரு மாஸ் மசலா சினிமாவுக்கான நேர்த்தியோடு அமைக்கப்பட்டு இருக்கிறது திரைக்கதை. அதுவும் நேர்கோட்டில் செல்லாத (Nonlinear) திரைக்கதை சொல்லலை ஒரு மசாலா திரைப்படத்தில் இடியாப்ப சிக்கல் ஆக்காமல் கையாண்டும் இருப்பது இயக்குனர் பிரசாந்த் நீலின் திரைக்கதை ஆக்கத்தின் திறமையை காட்டுகிறது.

கடந்த இரு தசாபங்களுக்குள் இந்திய சினிமாவில் வந்த நேர்த்தியாக எழுதப்பட்ட மசாலா டான் (commercial don) திரைப்படம் KGF.

Blue சட்டை மாறன் சொன்னது போல இந்த Script இனை எப்படி கதையாக தயாரிப்பாளருக்கும், நடிகர்களுக்கும் சொல்லி இருக்க முடியும். ஏனெனில் கதையாக இது அதர பழைய டான் கதைதான். ஆனால் வரலாற்றின் தொடுப்புகளோடு இணைத்து திரைக்கதையாகிய விதத்தில் இயக்குனரின் சினிமாவாக மிளிர்கிறது KGF.

Vikings பற்றிய குறிப்பு, ரவீனா டேண்டனின் பாத்திர படைப்பு போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.

KFG மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் அதன் தொழிநுட்ப அணிதான். பின்னணி இசை, எடிட்டிங் , VFX, ஒளிப்பதிவு, சண்டை பயிற்சி என அனைத்து துறைகளும் தமது பணிகளை செவ்வனவே செய்துள்ளன. அது தான் இந்த படத்தின் வெற்றியும் ஆகும்.

இந்த படத்தின் எடிட்டர் உஜ்வால் குல்கர்னி (Ujwal Kulkarni) க்கு 19வயதே தான். Youtube இல் குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்து கொண்டிருந்த இவர், KGF Chapter One ற்கு செய்த Fan Made விடீ யோவைை பார்த்த இயக்குனர் KGF Chapter Two இற்கு Teaser Cut பண்ணுவதற்காக அழைத்து உள்ளார். Cut பண்ணிய Teaser இனை பார்த்த பின்னர் எடிட்டிங் பொறுப்பை முழுவதுமாக கொடுத்துள்ளார்.

KGF Chapter one இல் வரும் ஒரு வசனம் போல ' powerful people come from powerful place' என்பது பொய் ' powerful people make powerful place' என்பதே உண்மை என்பது KFG Team க்கும் பொருந்தும்.

வழமையாக மொக்கையாக எழுதப்படும் டப்பிங் பட வசனங்கள் போல் அல்லாமல், தமிழ் மொழியில் வசனங்களுக்கு பார்வையாளர்கள் கூச்சல் போடுகிறார்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு மாஸ் திரைப்படத்தை ரசிகர்கள் கூச்சலும் கும்மாளமுமாக கொண்டாடும் திரையரங்க அனுபவமாக KFG இருந்தது.

ரஜனி, அஜித் , விஜய் படங்களுக்கு கூட ஆரம்பத்தில் அவர்கள் ரசித்து விட்டு பின்னால் பாவம் அவர்களே 'போதும் டா சாமி , நாங்களும் எவ்வளவு நாளைக்கு வலிக்காத மாதிரியே நடிக்கிறது' என்று இருந்து விடுவார்கள். KGF திரையரங்கில் பாட்ஷா பார்த்த அனுபவம் போல் இருந்தது. அதுவும் அந்த ''ரஷ்ஷிய பெரியம்மா'' காட்சிக்கெல்லாம் லண்டனில் திரையரங்கமே அதிர்ந்தது எனலாம்.

லண்டனில் வழமையாக பார்க்கும் திரையரங்கில் தான் பார்த்தேன். 15வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்க முடியும். சூப்பர் ஸ்டார்கள் சினிமாக்கள் கூட 15வயது கட்டுப்பாட்டுடன் திரையிட்டால் அம்போ தான்.

அதற்கு தமது படைப்பின் மீது அசராத நம்பிக்கை வேண்டும். சூப்பர் ஸ்டார் சினிமாக்கள் பெரும்பாலும் வாரஇறுதியை கணக்காக வைத்த மூன்று நாள் தாக்கு பிடிக்கும். அதற்குள் கல்லாப்பெட்டியை கட்டிவிட்டு மாபெரும் வெற்றி என அறிவித்து கேக் வெட்டி விடவேண்டும். அதன் பின்னர் சேடம் இழுத்து விடும். படத்தை பார்த்தவர்கள் உண்மையை உரக்க சொல்லிவிடுவார்கள்.

அதன் பின்னர் இந்த கருமத்தை பார்க்க திரையரங்கு போவான் ஏன் என இணையத்தை மக்கள் நாடிவிடுவார்கள்.

KGF உம் இணையத்தில் வெளிவிட படலாம். அதனையும் தாண்டி மக்களை திரையரங்குக்கு கூட்டி வரும் வித்தையை சில படங்கள் தான் செய்கின்றன.

அதனை KGF உம் நிகழ்த்தி இருக்கிறது. அதுவும் லண்டனில் நான் பார்த்த வரைக்கும் UK இல் பிறந்து வளர்ந்த தமிழ், கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட விடலை பருவத்தினர் கூட்டமாக வந்து ரசிக்கும் படமாக KGF காணப்படுகிறது.

Rocky Bhai அவர்களின் ஆதர்ச ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.

கோடிகளை சம்பளமாக ஏப்பம் விடும் தமிழன் so called சூப்பர் ஸ்டார்கள், இனியாவது மக்களையும் இணையத்தையும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல், கொஞ்சம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். 

- பா.நடேசன்



GalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016