ஈரானிய போராட்டக்காரர்கள் தொடர்பில் கமேனியின் அறிவிப்பால் பரபரப்பு
ஈரானில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மகிழ்விக்க முயற்சிக்கும் ஒரு பிரச்சனையாளர்களின் குழு என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான கௌரவ மக்களின் இரத்தத்தால் இஸ்லாமிய குடியரசு ஆட்சிக்கு வந்தது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போராட்டங்கள்
இந்த நிலையில், அதனை மறுப்பவர்களின் முன்னிலையில் அவரது அரசாங்கம் பின்வாங்கத் தயாராக இல்லை என்றும் அவர் கமேனி தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக தொடங்கிய ஈரானில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் இன்று 13வது நாளாகத் தொடர்கின்றன.
ட்ரம்பின் எச்சரிக்கை
மேலும், போராட்டங்களின் போது 48 போராட்டக்காரர்கள் மற்றும் 13 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் இணைய இணைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் நிலைமையை கண்காணித்து வருவதாகக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |