அலி கமேனியின் இறுதிச் சடங்கு! முக்கிய அரசியல் தலைவர்களை ஈரானுக்கு அனுப்பும் இந்தியா
படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டாவும், பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனும் வெள்ளிக்கிழமை ஈரானுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விழாவில் கலந்துகொண்ட உயர்மட்டப் பிரதிநிதித்துவம், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பு உள்ளிட்ட நாகரிகப் பிணைப்புகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வலுவான அடித்தளம்
மேலும், அரசியல் மற்றும் பொருளாதார ஈடுபாடுகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தையும் வழங்குகிறது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

கமெனிக்கான சடங்குகளும் இறுதி ஊர்வலங்களும் எதிர்வரும் சனிக்கிழமை தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹத்தில் நடைபெறும் நல்லடக்கத்துடன் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |