மீண்டும் போர் மூளும் அபாயம்: எதிரிகளுக்கு ஈரான் விடுத்த அறிவிப்பு!
ஈரானில் முரண்பாடுகளை விதைக்கும் முயற்சியில் எதிரிகள் பயன்படுத்தும் "மென்மையான போர்" தந்திரோபாயங்களுக்கு எதிராக ஈரானின் உச்ச தலைவரான அலி கமெனி (Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் "எதிரிகள்" என இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைக் குறிப்பிட்டு "மென்மையான போர் அச்சுறுத்தல்கள்" மூலம் பிரச்சினைகளை உருவாக்க முயல்வதாக அதன்போது அலி காமனி தெரிவித்துள்ளார்.
இராணுவ அச்சுறுத்தல்
தற்போது, கடுமையான பாதுகாப்பு அல்லது எதிரியின் இராணுவ அச்சுறுத்தல்கள் குறித்து தங்களுக்கு எந்த கவலையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, ஈரான் அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான திறன்களைக் கொண்டுள்ளதாகவும், அதன் மக்களுக்கு உயர் மட்ட பாதுகாப்பை உறுதி செய்கின்றதாகவும் அலி கமெனி கூறியுள்ளார்.
நெதன்யாகுவின் கருத்து
இந்த நிலையில், அண்மையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நாடு "ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு ஒரு பெரிய அடியை கொடுத்ததாகவும், அமெரிக்க ஆதரவுடன் ஈரானுக்கு எதிரான வேலையை முடிக்க சபதம் செய்ததாகவும் கூறியிருந்தார்.
இவ்வாறனதொரு பின்னணியில் ஈரானிய உச்ச தலைவரான அலி கமெனியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்