இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம்: சிதைக்கப்பட்ட பலஸ்தீன மக்களின் நகரம்
ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்ற போர்வையில் இஸ்ரேல் இராணுவத்தினர் கான் யூனிஸ் நகரம் மீது நடத்திய கோர தாக்குதலில் அந்நகரமே அடையாளம் தெரியாத அளவிற்கு உருக்குலைந்து போயுள்ளது.
பலஸ்தீன மக்கள் அதிக அளவில் வசித்து வந்த கான் யூனிஸ் நகர் மீது கடந்த டிசம்பர் மாதம் தாக்குதல் நடத்த தொடங்கியது இஸ்ரேல். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தினால்தான் தங்களது நோக்கம் நிறைவேறும் எனக் கூறியது.
நான்குமாதம் கடுமையான தாக்குதல்
சுமார் நான்கு மாதம் கடுமையான வகையில் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில், தெருத்தெருவாக சோதனை நடத்தி ஹமாஸ் அமைப்பினரை தேடினர். ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதைகளை தேடிப்பிடித்து அழித்தனர்.
ஹமாஸ் அமைப்பினரின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாக கான் யூனிஸ் கருதப்பட்டது. இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் தரைமட்டமாகின.
அடையாளத்தை இழந்துள்ள நகரம்
இந்த நிலையில் கான் யூனிஸ் நகர் மீது தாக்குதல் நடத்தியதற்கான நோக்கம் முடிவடைந்து விட்டது. இதனால் கான் யூனிஸ் நகரில் இருந்து வெளியேறுகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் கான் யூனிஸ் நகரில் வசித்த வந்த மக்கள் தங்களுடைய சொந்த நகருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். ஆனால் கான் யூனிஸ் நகர் தனது அடையாளத்தை இழந்துள்ளது.
பலஸ்தீன மக்கள் வேதனை
கட்டடங்கள் இருந்த இடம் தெரியாத வகையில் சிதைக்கப்பட்டுள்ளன. வீடுகள் இருந்த சுவடே தெரியவில்லை என நேரில் சென்று பார்த்த பலஸ்தீனர்கள் தங்களது வேதனைகளை தெரிவித்துள்ளனர்.
Palestine Red Crescent teams checked on PRCS Al-Amal Hospital, in Khan Younis following the withdrawal of occupation forces from the area, leaving behind significant damage to the hospital and its medical equipment, as well as Hebrew writings on the walls.#NotATarget ❌… pic.twitter.com/QhzpH1HVBu
— PRCS (@PalestineRCS) April 8, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |