ரஷ்ய ஏவுகணைகளின் தாக்குதலுக்கு உள்ளான கார்கிவ்
Russo-Ukrainian War
Russian Federation
By Vanan
உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மீண்டும் ரஷ்ய ஏவுகணைகளால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இன்று(19)கார்கிவ் நகரின் மையப் பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே எச்சரித்த விமானப்படை
கார்கிவ் பிராந்திய இராணுவத் தளபதியான ஓலே சினிஹுபோவ், நகரத்தில் தாக்குதல்கள் நடந்ததாகவும், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சினிஹுபோவின் கூற்றுப்படி, நகரத்தின் கோலோட்னோஹிர்ஸ்கி மாவட்டம் குறிவைக்கப்பட்டது.
கார்கிவ் பிராந்தியத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உக்ரைன் விமானப்படை ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்