கூரிய ஆயுதங்களால் தாக்கி சுட்டுக் கொலை - விசேட அதிரடிப்படையின் நகர்வு
கடவட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை மகிழுந்தில் கடத்தி கொலை செய்த சந்தேகநபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கூரிய ஆயுதங்களால் தாக்கி சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் சந்தேகநபர் கொலன்னாவ நாகஹமுல்ல பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் “கட் இஷாரா” என அழைக்கப்படும் 31 வயதுடைய இளைஞர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
அதிரடிப்படையின் புலனாய்வு
அவரிடம் இருந்து உந்துருளி வாகனம், ஐஸ் போதைப்பொருள், வாள், கத்தி, கையடக்கத் தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 23ஆம் திகதி இளைஞனை கடத்திச் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
