கிளிநொச்சியில் வாள்வெட்டு - 07 பேர் படுகாயம்!
police
kilinochchi
val veddu
By Vanan
கிளிநொச்சி - உருத்திரபுரம் கூழாவடி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள்வெட்டு மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
மேற்படி சம்பவம் நேற்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணல் ஏற்றும் விவகாரமே வாள்வெட்டில் முடிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டு தரப்புக்களுக்கு இடையிலான குழு முரண்பாடு இறுதியில் வாள்வெட்டில் முடிந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழுபேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் இருவர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கான சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருப்பதாகவும் தெரியவருகிறது.
கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்