கிளிநொச்சியில் வெதுப்பகம், உணவகங்கள் மூடப்படும் அபாயம்
kilinochchi
people
bakery
fuel
By Thavathevan
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயு கோதுமை மா என்பனவற்றுக்கு முற்று முழுதாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15 இற்கும் மேற்பட்ட உணவகங்களும், பல வெதுப்பகங்களும் மூடும் நிலையில் உள்ளதாக உணவக உரிமையாளர்கள் மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் பணிபுரியும் பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் எரிபொருள் மற்றும் கோதுமை மா சமையல் எரிவாயு என்பனவற்றைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி