மீண்டும் அதிகரித்த கொரோனா - தொற்று நோயியல் மருத்துவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
corona
kilinochchi
northern province
sri Lanka
By Kalaimathy
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்வதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நேற்று கிளிநொச்சியில் மற்றும் பளை காவல் நிலையத்தில் 3 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதோடு, மொத்தம் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
வீதிகளில் நடமாடுவோர், பொது இடங்களுக்கு செல்வோர், பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் பொது சந்தைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஆகவே தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.