கிளிநொச்சி நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை உத்தரவு திருத்தங்களுடன் நீட்டிப்பு! (காணொளி)
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு, முன்பு வழங்கப்பட்ட தடை உத்தரவு மீளப்பெற முடியாது என கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் சிறிகாந்தா, மாவீரர் நாள் தடை உத்தரவு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வருகின்ற மாவீரர் நாள் பொது இடங்களில் நடத்த முடியாது என்றும் கோயில்களில் விளக்குகள் ஏற்றி நிகழ்வுகளை செய்ய முடியுமென்றும் நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.
மாவீரர் நாள் தடை உத்தரவு தொடர்பாக நீதிமன்றில் சுமார் 3 மணித்தியாலம் இடம்பெற்ற விவாதத்தின் பின்னர் நீதிபதி சட்ட திட்டத்திற்கு அமைவாக வழங்கப்பட்ட தடை உத்தரவு மீளப்பெற திருத்தியமைக்கத் தேவையில்லை ஆனால் மதஸ்தலங்களில் பொதுமக்கள் ஏற்றவாறு மத வழிபாடுகளை செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக சந்திப்பின் போது மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், வேலமாலிகிதன் ஜீவராசா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.