கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த கர்ப்பிணி!
corona
sri lanka
kilinochchi
death
By Kalaimathy
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் கர்ப்பவதி ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் மேலதிகசிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது கர்ப்பிணி எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அனைவரும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.