கிளிநொச்சியில் கொரோனாவால் வீட்டிலேயே உயிரிழக்கும் நோயாளர்கள்!
கிளிநொச்சியில் கடந்த இரு தினங்களான பெரியபரந்தன் மற்றும் கண்ணகிநகர் ஆகிய கிராமங்களில் வீட்டில் இறந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரியபரந்தன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடை ஆண் ஒருவர் வீட்டில் இறந்த நிலையில் கடந்த மூன்றாம் திகதி வைத்தியசாலைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு மாதிரி பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர் மாதாந்தம் கிளினிக் செல்கின்ற நோயாளியாவார்.
இதேவேளை கண்டாவளை கண்ணகிநகர் கிராமத்தில் 67 வயது பெண் வீட்டில் இறந்த நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது கொரோனா மரணமும் வீட்டில் இறந்தமை
குறிப்பிடத்தக்கது
இரு உடல்களும் வவுனியாவில் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.