கிளிநொச்சி - சிவன் ஆலயத்தில் பௌத்த சின்னங்கள்? அகழ்வாராய்ச்சிக்கு ஏற்பாடு
SRILANKA
kilinochchi
By Vasanth
கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்கு ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராய்ச்சி இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.