கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வழங்கப்பட்ட மதிய உணவு
Self-isolation
Kilinochchi
Rice
By Vasanth
கிளிநொச்சி கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் இன்று மதியம் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டுள்ளதாக அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மதியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் காணப்பட்டதாகவும் உணவுகள் பார்சல் மூலம் வழங்கப்படுவதுடன் அதனை கதிரை ஒன்றில் வைத்துவிட்டு சென்று விட்ட நிலையில் உணவை எடுத்து உணவு உண்ணும்போது புழுக்கள் காணப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் இது தொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் தெரிவித்தபோதும் கருத்திலெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வவுனியா வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியுள்ளனர்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி