கிளிநொச்சி வாள்வெட்டுத் தாக்குதல்! சாட்சியங்களை மறைக்க ஏற்பாடு?

srilanka police kilinochchi investigation
By Vasanth Jan 29, 2021 01:55 PM GMT
Report

கிளிநொச்சி - வலைப்பாடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிஸார் முற்படுவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், சாட்சியங்களை மறைக்க முற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற இரவு 1 மணியளவில் 119 இலக்க அவசர அழைப்புக்கு தகவல் வழங்கியதாகவும், அதன் பின்னர் வெள்ளம் காரணமாக பொலிஸார் அவ்விடத்திற்கு உடனடியாக வரமுடியாதுள்ளதாக தெரிவித்ததாகவும் பின்னர் காலையே அவர்கள் வருகை தந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறிப்பிடும் அவர்கள், காலை வந்த பொலிஸார் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தடயப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அன்று மாலை தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலத்திற்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாறாக தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் நடமாடியதற்கான சிசிரிவி காட்சிகள் உள்ளிட்ட தடயப் பொருட்கள் மற்றம் சான்றுகளை மறைக்க முற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தாக்குதல்தாரிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி