கிளிநொச்சியில் பாழடைந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அபாயகர பொருட்கள்! (காணொளி)
police
kilinochchi
army
ratnapuram
By Kalaimathy
கிளிநொச்சியில் வீடொன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் இருந்தே வெடிபொருட்கள் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இரத்தினபுரம் செல்லும் வீதியில் உள்ள நீர்த் தாங்கிக்கு முன்புள்ள தனியார் வீட்டிலேயே மீட்கப்பட்டுள்ளது.
அவ்வீட்டில் ஆள் நடமாட்டங்கள் இல்லாமையினால் இனம் தெரியாத நபர்களினால் பழைய 30 ஏகே ரவைகள் மற்றும் 3 ஏகே 47 துவக்கிற்குரிய மகஸின்கள் என்பன வைக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.







மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்