கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
Kilinochchi
Sri Lanka Police Investigation
Drugs
By Laksi
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை நேற்று(02) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு
கிளிநொச்சி விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து விசுவமடு பகுதியில் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட படையினர் 21கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் குறித்த இளைஞனை கைது செய்து புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விசுவமடு - ரெட்பானா பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞனை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 1 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி