அனுமதிப் பத்திரத்திற்கு முரணாக மணல் கடத்தல் : மூவர் கைது(படங்கள்)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிப் பயணித்த மூன்று கன ரக வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கிளிநொச்சி தர்மபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட கல்லாற்று பகுதியில் (தடைசெய்யப்பட்ட பகுதி )வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையினருக்கு இன்று(29) கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூவரும் காவல்துறை விசாரணைகளின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்