மன்னர் சார்லஸ் உயிரிழந்துவிட்டாரா..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
மன்னர் சார்லஸ் உயிரிழந்துவிட்டார் என வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் (75), புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கடந்த மாதம் பக்கிங்காம் அரண்மனை தெரிவித்தது.
ரஷ்ய ஊடகங்களில்
இதற்கிடையே, ரஷ்ய ஊடகங்களில் நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் பிரிட்டன் மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக தகவல் பரவியது. ரஷ்யா மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாக பரவியது.
இங்கிலாந்து அரச குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியிட்ட ரஷ்ய ஊடகங்கள், மன்னர் சார்லஸ் குறித்த போலி புகைப்படங்களையும் இணைத்திருந்தன.
சார்லஸ் மன்னருக்கு இரங்கல்
இதையடுத்து, தஜிகிஸ்தானில் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தியும் வெளியிட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் சார்லஸ் இறந்து விட்டதாக வெளியான தகவல் வெறும் புரளி. மன்னர் சார்லஸ் உயிருடன் இருக்கிறார் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |