அடுத்த வாரிசை தெரிவுசெய்ய தீர்மானித்துள்ளார் மன்னர் சார்லஸ்.... காரணம் இது தான்
மன்னர் சார்லஸ் தனது அடுத்த வாரிசு யார் முடிவு செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புற்றுநோயால் மன்னர் சார்லஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மன்னர் சார்லசுக்கு வந்துள்ள அந்த நோய், நினைத்ததைவிட அதிக ஆபத்தாக இருப்பதாக அரச குடும்பத்தின் எழுத்தாளரும் நிபுணருமான டொம் குயின் (Tom Quinn) என்பவர் தெரிவித்துள்ளார்.
80 வயதுகள் வரையாவது மன்னர் வாழ்வார் என முதலில் நம்பப்பட்ட நிலையில், அவரது புற்றுநோய் அதிக ஆபத்தானது என தெரியவந்துள்ளதால் அரச குடும்பம் மிகுந்த கவலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விரைவாக முடிவு
இதனால், அடுத்து மன்னராக இருப்பவரை விரைவாக முடிவு செய்யும் முயற்சியை அவர் ஆரம்பித்துள்ளதாகவும், அதை இரகசியமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹரியை நம்பமுடியாது என்பதாலும், என்ன விடயம் தெரியவந்தாலும் அவர் உடனடியாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்க சென்றுவிடுவதாலும், அவரிடமிருந்து இந்த விடயம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் டொம் குயின் (Tom Quinn) குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு அடுத்து அரியணை ஏறுபவராக, மன்னர் சார்லஸ் இளவரசர் வில்லியமைத்தான் அவரது மனதில் தேர்ந்தெடுத்து வைத்துள்ளார் என்பதில் மட்டும் எந்த சந்தேகமும் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |