வடக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ஆம்பர் எச்சரிக்கை
பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான 'அம்பர்' எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி இன்று (3.04.2025) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை நடைமுறையினல் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 'ஆம்பர்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது மேலும் தெரிவித்தது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்