மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு - தமிழர் பகுதியில் சோகம்
accident
sri lanka
death
kinniya
By Shalini
திருகோணமலை - கிண்ணியா பிரதான வீதி, வில்வெளி என்ற இடத்தில் இன்று (21) இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
கிண்ணியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது, கிண்ணியாவில் இருந்து மணல் ஏற்றி தென் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து, கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.