இன்று முதல் கிண்ணியாவில் அடக்கம் செய்யப்படும் சடலங்கள்
corona
sri lanka
people
kinniya
death body
By Shalini
கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 'கொவிட் 19 விஷேட மையவாடி'யில் இன்று முதல் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இக் காணியில் சுமார் 4,000 சடலங்களை அடக்கம் செய்வதற்கான வசதியுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச சபைத் தவிசாளர் கே.எம்.நிஹார் தெரிவித்துள்ளார்.
இதற்காக 10 ஏக்கர் அரச காணி ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காணியை கொவிட் 19 தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொண்டு சிபாரிசு செய்ததையடுத்தே கொவிட் 19 செயலணியினாலும் சுகாதார அமைச்சினாலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.