எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி

Lakshman Kiriella Sri Lankan Peoples NPP Government
By Dhilak Sep 01, 2026 02:00 AM GMT
Report

தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைவது நிச்சயம் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து ஒரே பொதுப் பட்டியலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு! வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வெப்பம்

தேர்தல் தோல்வி பயம்

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, “மாகாண சபைத் தேர்தலோ அல்லது உள்ளுராட்சி மன்றத் தேர்தலோ எது நடத்தப்பட்டாலும் அரசாங்கம் அதில் தோல்வியடைவது உறுதியாகும். இந்தத் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே அரசாங்கம் தேர்தல்களை நடத்தாமல் தொடர்ச்சியாகக் காலத்தைக் கடத்தி வருகிறது.

எதிர்வரும் தேர்தல்களில் அரசாங்கத்திற்கு தோல்வி நிச்சயம்! லக்ஷ்மன் கிரியெல்ல உறுதி | Kiriella Said Government Is Certain To Fail

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் நடத்தப் போவதில்லை என்பதே எனது கணிப்பாகும்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் சவால்களும் நிலவிய போதிலும், ஒரு தேர்தல் என்று வரும்போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கை கோர்க்கும். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே சுமுகமான தீர்மானத்திற்கு வந்துள்ளன.

அதற்கமைய, வரவிருக்கும் தேர்தலில் இரு கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் ஒரே பொதுப் பட்டியலில் களமிறக்கப்படுவார்கள். போட்டியிடும் தேர்தல் சின்னம் எது என்பது ஒரு சிறிய விவகாரமே தவிர அது ஒருபோதும் பிளவை ஏற்படுத்தாது.

இரு பிரதான சக்திகளும் ஒன்றிணைவதே இங்கு முதன்மையானது. எனவே, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள இரு கட்சிகளும் நிச்சயமாக ஒரே அணியாக இணைந்து செயற்படும்” என்றார். 

களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை

களுத்துறை துப்பாக்கிச் சூடு! பானந்துர நிலந்தவின் மைத்துனர் படுகொலை

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் இராணுவ அதிகாரி தாக்குதல்! வெளிநாட்டுத் தூதரக அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு

ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016