யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பாக ஆய்வு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது
அதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய தினம் துறைமுகத்தை பார்வையிட்டனர்
அமைச்சர்கள் உள்ளிட்ட குழாம் துறைமுகத்தை பார்வையிட்டதுடன் , எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
விசேட காட்சிக்கூடம்
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் கிராமப்புறங்களிலுள்ள இளையோரிடத்திலும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரந்தளவிலான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கும், இத்துறை மீதான ஈர்ப்பை இளையோரிடத்தில் தூண்டும் வகையில் பலாலி விமான நிலையத்தில் விசேட காட்சிக்கூடமொன்றை நிறுவுவதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |