கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: விரைவில் வருகிறது இறுதி அறிக்கை

Mullaitivu
By Jaso Mar 02, 2025 08:24 PM GMT
Report

முல்லைத்தீவு(mullaitivu) மாவட்டத்தின் கொக்குளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது

அந்த வகையில் கடந்த 27.2.2025 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க. வாசுதேவா மற்றும் காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா,

மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டு அறிக்கைகள் 

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டு அறிக்கைகள் என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது முதலாவதாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்த உடைகள் தொடர்பான ஆய்வறிக்கையும் இரண்டாவதாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் போது அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆட்களை இனம் காணக்கூடிய பொருட்கள் சம்பந்தமான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: விரைவில் வருகிறது இறுதி அறிக்கை | Kokkuttoduwai Human Grave Final Report Coming Soon

நிச்சயமாக இரண்டாவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

திரைப்படமாகிறது மகிந்தவின் வாழ்க்கை வரலாறு

திரைப்படமாகிறது மகிந்தவின் வாழ்க்கை வரலாறு

இறந்தவர்களை இலகுவாக இனங்காண முடியும்

இந்நிலையில் குறித்த இலக்கத்தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: விரைவில் வருகிறது இறுதி அறிக்கை | Kokkuttoduwai Human Grave Final Report Coming Soon

மேலும் இறுதி அறிக்கை எதிர்வரும் ஆறு வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது இறுதி அறிக்கையின் போது சட்ட வைத்தியர்களின் பூரண அறிக்கை இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் அவர்களின் வயது, உயரம் போன்ற விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் ஆறு வார காலத்தில் சமர்ப்பிக்கப்படும் இல் வழக்கானது அடுத்த தவணைக்காக மார்ச் 27 க்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்   

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியை அறிவித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியை அறிவித்த ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019