கொளத்தூர் த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ். பாபு காலமானார்!
தமிழ்நாடு சென்னை கொளத்தூர் தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ வி.எஸ். பாபு சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக, செப். 9ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.எஸ். பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று பிற்பகல் மாரடைப்பால் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை தோற்கடித்ததால், தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு தனிக்கவனம் பெற்றிருந்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம்! ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ். பாபு, செப். 9ஆம் திகததி நுரையீரல் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2006ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் புரசைவாக்கத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினரானார்.
தி.மு.கவுக்கு வந்த சேகர்பாபு, வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தியதால், அதிருப்தியில், தி.மு.கவிலிருந்து வெளியேறி அ.தி.மு.கவில் இணைந்தார்.
அங்கு அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் த.வெ.கவில் இணைந்தார்.
தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்காக உழைத்த வி.எஸ். பாபு, 2026 பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில், அவரை எதிர்த்தே த.வெ.க சார்பில் களமிறக்கப்பட்டு, வெற்றியும் பெற்றிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |