அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு: நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட விளக்கம்
நாட்டில் உள்ள அரச ஊழியர்களுப்பான சம்பள முரண்பாடுகளுக்கு, சம்பள ஆணைக்குழுவின் ஊடாகவே தீர்வு காண முடியும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சம்பள விடயத்தில் ஒருபோதும் தீர்வை பெறமுடியாது. மாற்றங்களும் ஏற்படாது.
சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினை
அரச சேவையில் உள்ள தரப்பினர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்படி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஆண்டின் முதற்காலப்பகுதியில் அறிக்கையொன்றை சம்பள ஆணைக்குழு சமர்ப்பிக்கும்.
மேலும், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் சம்பள ஆணைக்குழு எதிர்வரும் ஆண்டின் முதற்காலப்பகுதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு எதிரான இறைநிந்தனை பௌத்த மதத்துடன் ஒத்துப்போகாது! ஞானசார தேரருக்கு நீதிமன்றில் கடும் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |