புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பாடசாலை மட்ட விழிப்புணர்வு
Ministry of Education
Education
School Children
By Sathangani
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான பாடசாலை மட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இன்று (19) ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான இந்த விழிப்புணர்வு அமர்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டங்களின் போது, புதிய கல்விச் சீர்திருத்தச் செயன்முறை குறித்த அடிப்படைப் புரிதல் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சு
அத்துடன், மேலதிக விளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் விழிப்புணர்வு முறைமைகள் குறித்த அறிமுகமும் வழங்கப்படவுள்ளது.

இதற்கான அனைத்துத் தேவையான கற்றல் துணைச் சாதனங்களும் இணையவழி ஊடாக சகல அதிபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்