கொழும்பில் தமிழரின் படுகொலை: பின்னணியில் இருந்த மறைகரம் அம்பலம்
கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை பகுதி கடையில் ஒருவரை சுட்டுக் கொல்ல ஒப்பந்தம் வழங்கியவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த சம்பவத்தின் பின்னணியில் மோதர நிபுன என்ற நபர் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது நடவடிக்கை
காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதற்கு முன்பு கைதான சந்தேகநபர்கள் இருவரும் இந்த தகவலை வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை - கல்பொத்த சந்தியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகபர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வசமிருந்த துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
காவல்துறை துப்பாக்கிச் சூடு
அதனை தொடர்ந்து, சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்ளை காட்டச் சென்றபோது, காவல்துறையினரின் துப்பாக்கிகளைப் பறித்து காவல்துறையினரை சுடுவதற்கு முயன்றுள்ளனர்.
இந்த நிலையில், விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், காயமடைந்த இரண்டு சந்தேக நபர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
மேலும், சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
