நாட்டை உலுக்கிய கொத்மலை பேருந்து விபத்து : மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 11 ஆம் திகதி குருணாகலிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தில் 84 பேர் பயணித்திருந்த நிலையில் 23 பேர் உயிரிழந்த நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
ஒருவர் உயிரிழப்பு
இதில் நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே தற்போது உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை குறித்த விபத்தின் போது, விபத்துக்குள்ளான பேருந்தின் கீழே பெண்ணொருவர் சிக்கியிருந்த நிலையில், தனது ஆறு மாத குழந்தையை இடுப்பின் கீழே பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
