ஊரடங்கு காலத்திலும் பாலியல் நடவடிக்கை! சுற்றிவளைப்பில் சிக்கிய 4 பெண்கள்
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி, மசாஜ் நிலையம் எனும் பெயரில் இணையத்தினூடாக இயங்கிய பாலியல் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாரச்சந்தைக்கு அருகில் உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்ரிறிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்கள் மற்றும் அங்கு பெண் ஒருவரின் சேவையைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 30 - 37 வயதுக்கு இடைப்பட்ட மத்துகம, பலாங்கொடை, பாதுக்கை, பெலிவுல்ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர்களை ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கொட்டாவ பொலிஸர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.