“கௌரிசங்கரியின் மறைவு” தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பு - சசிகலா இரங்கல் செய்தி
சட்ட மாமேதை சகோதரி, சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் மறைவு குறித்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எனது கணவர் படுகொலை செய்யப்பட்டபோது , நான் கலங்கி நின்ற வேளை முதலில் அந்த இடத்துக்கு வந்து எனக்கு துணையாக நின்றவர்கள் சகோதரி கௌரி சங்கரியும் அவர் தம் கணவரும் தான்.
அரசியல் கைதிகளுக்கான அவரது பங்களிப்பு அளப்பரியது. குற்றவியல் வழக்குகளில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா எவ்வளவு முக்கியம் வாய்ந்தவரோ? அதற்கு நிகராக குடியியல் வழக்குகளில் சகோதரி கௌரி சுந்தரி ஒரு பேராளுமை.
தனது சட்டத்துறையில் மதியுகியாக மிளிர்ந்து பலரது வாழ்வை ஒளிரச் செய்த பெருந்தகை.
இவரது இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
