TID அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிருஷ்ணகுமார் விடுதலை!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி கிருஷ்ணகுமார் கந்தசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து அவர் நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தியாவில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் திருச்சி சிறப்பு முகாமில் பல ஆண்டுகள் தடுப்புக்காவல் என மொத்தம் 11 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமார் கந்தசாமி, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த அக்டோபர் 26, 2026 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சிறப்பு முகாமில் கட்டாய நாடுகடத்தல் அரங்கேறுகிறதா...
நீதிமன்ற விசாரணை
அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் குடிவரவு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு, அன்றைய தினமே மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான தடுப்புக்காவல் உத்தரவு (Detention Order) பெறப்பட்ட நிலையில் இன்று இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைக்கு அமைய அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |