இதுதான் பிரபாகரனிசம் : பிரபாகரனின் தத்துவம்! (காணொளி)
“யாருடைய உதவிகளும் இல்லாமல் சிங்கள அரசாங்கத்திற்கெதிராக போராடியதோடு, எவ்விதமான பொருளாதார அடிப்படைகளும் இல்லாமல் தனி இராச்சியத்தையே கட்டமைத்த தலைமைத்துவ பண்பே பிரபாகரனிசம்.”
இவ்வாறு, தமிழகத்தின் பல்வேறு உரிமைகளுக்காக உயர்நீதிமன்றம் வரை சென்று, பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியலாளர், மூத்த வழக்கறிஞர் கே. எஸ் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழின் மெய்பொருள் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் வே.பிரபாகரனின் தலைமைத்துவம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,

“இன்று, இலங்கைக்கு பல்வேறு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் உதவிகரம் நீட்டி வருகின்றது.
இருந்தபோதிலும், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீழ முடியாது, மக்கள் மீது அதிகரித்த வரிச்சுமைகளையும், விலைவாசிகளை அதிகரிக்கும் நிலைப்பாடுகளே காணப்படுகின்றன.
ஆனால், எவ்வித ஆதாரங்களும் இல்லாமல், தனி ஒரு இராச்சியத்தையே கட்டமைத்தமையே பிரபாகரனின் தத்துவமாகும்.
தன்னுடைய சகா ஒருவர் எங்காவது பணமில்லாமல் இருப்பார், பயிற்சியில் இருப்பார், உணவருந்தாமல் இருப்பார் என தலைவர் வே.பிரபாகரனும் உணவருந்தாமல் இருப்பார்.” என வலியுறுத்தியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்