குடவத்தை மக்களிடமிருந்து றஜீவன் எம்.பிக்கு பறந்த முறைப்பாடு
குடவத்தை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடவத்தை மக்களே இவ்வாறு முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
தாம் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகம் எந்தவிதமான உதவிகளையும் செய்யவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல வீடுகள்
அண்மைய டித்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல வீடுகள் உள்ளன என்றும் இருப்பினும் இதுவரை எந்தவித உதவிகளும் யாரும் செய்யவில்லை என்றும் தமக்கான நிவாரணங்களை பெற்றுத்தருமாறும் குறித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலாளரை உடனடியாக அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலரை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்