குமுதினி படகு மீண்டும் சேவையில்
குமுதினி படகு மீண்டும் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட குழுதினிப்படகு பழுதடைந்த நிலையில், திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்டகாலமாக திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திருத்தும் பணிகள் நிறைவு
திருத்தும் பணிகள் நிறைவுற்று இன்று மதியம் 1 மணியளவில் விசேட பூஜை இடம்பெற்று இன்றிரவு குமுதினி படகு கடலில் இறக்கப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான குமுதினிப் படகு மற்றும் வட தாரகைப் படகு என்பன, நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட நிலையில், குமுதினிப் படகு பழுதடைந்ததையடுத்து, வடதாரகைப் படகு மட்டுமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் மூலம் நெடுந்தீவிற்கான போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்கள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
