சுமந்திரனின் உருவ பொம்மையுடன் யாழில் மீனவர்கள் எதிர்ப்பு போராட்டம்!
jaffna
protest
sumanthiran
fisher man
kurunagar
By Kalaimathy
யாழ்ப்பாணம்-குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் எனத் தெருவித்ததை எதிர்த்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.




