குருந்தூர் மலை விவகாரம் - திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்று

Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu
By Vanan Jul 19, 2022 11:31 PM GMT
Report

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் திருத்தத்துடன் புதிய கட்டளையை முல்லைத்தீவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

வழங்கிய திருத்திய கட்டளையில், தொல்லியற் சின்னங்களை பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதாக 14.07.2022 ஆம் திகதிய கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின் பால் அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் குறித்த புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றது எனவும் தெல்லியற் திணைக்களம் 12.06.2022 இல் இருந்தது போலவே குறித்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும் குறித்த கட்டுமானங்களை அகற்றி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படாத வகையில் காவ்துறையினர் உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14.07.2022 அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல்

குருந்தூர் மலை விவகாரம் - திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்று | Kurundur Malai Issue Court Order Change

இந்த நிலையில் நீதிமன்று வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு காவல்துறையினர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்த நிலையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து நேற்றையதினம் (19)குறித்த வழக்கு மீண்டும் விளக்கத்துக்கு வந்த நிலையில், இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

குருந்தூர் மலையில் புதிய பௌத்த கட்டுமானங்கள் எவையும் அமைக்கப்படவில்லை எனவும் மாறாக தொல்லியல் திணைக்கள சட்டத்துக்குட்பட்டு புராதன சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுவதாகவும் இன்றையதினம் (19) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் நடைபெற்ற நேற்றைய வழக்கு விசாரணையில் தொல்லியல் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் இரு சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டதரணி அன்டன் புனிதநாயகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சட்டதரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்ட தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல்

குருந்தூர் மலை விவகாரம் - திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்று | Kurundur Malai Issue Court Order Change

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுவதாகவும் அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கு தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டு வருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அத்தோடு இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே மன்று 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கபட்டுள்ளதாகவும் மன்tamilsறில் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெற்றுவரும் புதிய கட்டுமானத்தை பார்க்க முடியும் எனவும் கூறினர்.

குருந்தூர் மலைக்கு கள விஜயம்

குருந்தூர் மலை விவகாரம் - திருத்தத்துடன் புதிய கட்டளையை பிறப்பித்தது முல்லைத்தீவு நீதிமன்று | Kurundur Malai Issue Court Order Change

எனவே மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டு கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள் சட்டதரணிகள் கட்டுமானம் இடம்பெற்றுவரும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.

இங்கு நிலைகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றிலே வருகை தந்து குறித்த வழக்கிற்கான புதிய திருத்திய கட்டளையை நீதிபதி பிறப்பித்துள்ளார்.


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Toronto, Canada

08 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022