“தமிழ் பெண்கள் மீது அத்துமீறிய காடையர்கள்” - கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம்
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலே சிறிலங்கா காவல்துறையினர் காடைத்தனமாக செயற்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்விற்கு நீதிமன்றம் தடை உத்தரவை வழங்க மறுத்த போதிலும், நீதிமன்ற அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று பொங்கல் நிகழ்வுகள் ஏற்பாடாகியிருந்த போது பதட்ட நிலை ஏற்பட்டிருந்தது.
அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைதொடர்பிலும் அங்கே காவல்துறை செயற்பட்ட விதம் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
"தமிழ் பெண்களை காவல்துறையினர் பலவந்தமாக தள்ளி அவர்களது நெஞ்சிலே அடித்து, மிகவும் காடைத்தனமான முறையிலே அங்கிருந்து செயற்பட்டனர்.
நான் அந்த இடத்திலிருந்து நகர மறுத்த பொழுது என்னுடைய சேட் கொலரிலே பிடித்து காவல்துறை உயர் அதிகாரி பலவந்தமாக என்னை இழுத்து கீழே விழுத்தினார்.
இவ்வாறாக எம்மீது மிகப்பெரிய அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டது” - என செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார்.
காவல்துறையினரின் காவாலித்தனம்

ஆயுதங்களை கொண்டு தமிழ் மக்களை அடக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளர் சட்டத்தரணி காண்டீபன் கூறியிருக்கிறார்.
நாங்கள் மீண்டும் சிங்கள பௌத்த பேரினவாத அரசுக்கு இந்விடயத்தை சொல்லி வைக்க விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள காடையர்கள், காவாலி காவல்துறையினர் காவாலித்தனத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்