குருந்தூர் மலையில் இன்று பொங்கல்
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இன்றைய தினம் திட்டமிட்ட வகையில் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
குருந்துார் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்துக்களின் வழிபாடுகள் தடைப்பட்டுள்ள சூழலிலேயே இன்று பொங்கல் இடம்பெறவுள்ளது.
காவல்நிலையத்தில் முறைப்பாடு

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் அங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து கல்கமுவ சாந்தபோதி தேரர் முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கும் எதிராக அவர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இதனால் இன்றைய தினம் சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
வாக்குமூலம் பதிவு

இது தொடர்பாக துரைராசா ரவிகரனிடம் முல்லைத்தீவு காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் இன்றையதினம் பூஜைகள் நடைபெறும் என ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.