விசா தாமதத்திற்குப் பிறகு உலகக் கோப்பை அணியில் இணைந்துள்ள இலங்கை வீரர்கள்
சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் (Kusal Mendis) மற்றும் பந்து வீச்சாளர் அசித்த (Asitha Fernando) பெர்னாண்டோ ஆகியோர் நடைபெறவிருக்கும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அணியில் இணைந்துள்ளனர்.
இலங்கை தேசிய அணி மே 14 ஆம் திகதி அமெரிக்காவிற்கு புறப்பட்ட போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் விசா வழங்கப்படாததன் காரணமாக இவர்கள் இருவருக்கும் அணியுடன் பயணிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீரர்கள் இருவரும் நேற்று முன்தினம் (22) அமெரிக்கா சென்றடைந்து, வட கரோலினாவில் (North Carolina.) உள்ள மோரிஸ்வில்லி (Morrisville) பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
பயிற்சி ஆட்டங்கள்
வனிந்து ஹசரங்க (Wanindu hasaranga) தலைமையிலான 15 பேர் கொண்ட சிறிலங்கா அணியின் வீரர்களும் வரவிருக்கும் பயிற்சி ஆட்டங்களுக்கு அனைத்து வீரர்களும் தகுதியாக இருப்பதாக சிறிலங்கா ஆடவர் மற்றும் மகளிர் தலைமை தேர்வாளர் உப்புல் தரங்க (Upul Tharanga) தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக சிறிலங்கா இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |