தினமும் 50 வெளிநாட்டவர்களை நாடு கடத்தும் நாடு
daily
kuwait
expats
By Sumithiran
கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது,
குவைத்தில் தினமும் 50 பேர், மாதம் 1,518 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக வசிப்பவர்களே பெரும்பாலும் நாடு கடத்தப்படுகிறார்கள். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாக கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி