மத்திய கிழக்கில் பதற்றம் : குவைத் விமான நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குவைத்தின் தேசிய விமான நிறுவனம் இன்று (18) அறிவித்துள்ளது.
விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக, குவைத்தின் உத்தியோகபூர்வ விமானச் சேவையான 'குவைத் எயார்வேஸ்' தங்களது பெரும்பாலான விமானப் பயணங்களின் நேரங்களை மாற்றியமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நேரங்கள்
இதன் காரணமாக, பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் புதிய நேரங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அந்த விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
#kuwait_airways announces to its valued customers the rescheduling of most of its flights due to the temporary suspension of takeoff and landing operations at Kuwait International Airport as a result of hostile missile and drone attacks following the Iranian aggression on…
— Kuwait Airways (@KuwaitAirways) July 18, 2026
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுப்பதுடன் அதற்குப் பதிலடியாக தெஹ்ரான், அமெரிக்காவின் தளங்களைக் கொண்டுள்ள குவைத் உட்பட பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |