தொல்பொருளியல் திணைக்களத்தில் அதிகரித்துள்ள ஊழியர் பற்றாக்குறை : கணக்காய்வு அலுவலகம் அறிவிப்பு
சிறிலங்காவின் தொல்பொருளியல் திணைக்களத்தில் இரண்டாயிரத்து 476 ஊமியர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் திணைக்களத்தின் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் பற்றாக்குறை
திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 318 ஆக இருந்தாலும் தற்போது ஆயிரத்து 882 பேர் மாத்திரம் கடமையாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தொல்பொருளியல் திணைக்களத்தில் ஊழியர்களின் பற்றாக்குறை 57 வீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் இதுவரை பொறுப்பதிகாரிகளால் முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.