அஜித் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வேலைத்திட்டம்
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டம் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டு, நாடாளுமன்ற நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
கணக்காளரின் ஆண்டறிக்கை
அத்துடன், 2022 ஆம் கணக்காளரின் ஆண்டறிக்கையும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யு.பீ.சீ. விக்ரமத்னவினால் பிரதி சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 200க்கும் அதிகமான அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கை இவ்வாறாக இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அஜித் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.