கை மீறிச் சென்றது குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு!
corona
sri lanka
people
By Shalini
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உள்ள குழந்தைகளில் MIS-C என்ற நிலை அதிகரிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவு அதன் திறனை மீறியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்குப் பொறுப்பான நிபுணர் டாக்டர் நளின் கிதுல்வத்த கூறினார்.
சுமார் 45 குழந்தைகள் தற்போது லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் நான்கு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.
இது இங்கு மட்டும் இல்லை. இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இரண்டு முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு இந்த ஆபத்தான நிலை ஏற்படுகிறது என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.