புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பித்த எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம்!
SRILANKA
Lakshman Kiriella
By Vasanth
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் புத்தாண்டில் தமது கடமைகளைத் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பௌத்த, இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய முறைப்படியான வழிபாடுகளுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொது பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், அனைத்து இன, மதங்களையும் பாதுகாக்கும் அதேவேளை அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என கூறினார்.
மேலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மக்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு தற்போது பொதுமக்கள் கடும் சுமையை கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி